பேருந்து பயணிகளின் உரிமைகள்

 • பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படுவதற்கு முன்னர், உங்கள் பிரயாணத்தின் தொடக்கத்தில் பயணச்சீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு உமக்கு உரிமை உள்ளது.
 • ஏறுமிடம் மற்றும் இறங்குமிடம், பயணச்சீட்டின் விலை, திகதி மற்றும் பேருந்து இலக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பற்றுச்சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு உமக்கு உரிமை உண்டு.
 • கட்டணம் செலுத்தப்பட்ட இலக்கு வரை நீங்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
 • நீங்கள் நல்ல நடத்தை, புத்திசாலித்தனமாகவும் ஒழுக்கமாகவும் உடையணிந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரினால் மரியாதையான வரவேற்பினை பெறல் வேண்டும்.
 • சாதாரண சேவையிலுள்ள பேருந்தொன்றில் 3 தொடக்கம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயதுவந்தோருக்கான சாதாரண பேருந்துக் கட்டணத்தின் பாதி விலையில் பயணிக்க முடியும்.
 • சொகுசு பேருந்து சேவை ஒன்றெனில், குளிரூட்டப்பட்ட வசதிகளை அனுபவித்து மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேற்படாத பயணிகளைக் கொண்ட சேவையொன்றில் பயணிக்க வேண்டும்.
 • பொதுப் போக்குவரத்துச் சேவையில் புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதால் புகையற்ற சூழலில் பயணிப்பதற்கு உமக்கு உரிமை உண்டு.
 • அதிவேக, பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான அல்லது வீதி விதிகளை மீறும் போக்குவரத்தினை எதிர்க்க உமக்கு உரிமை உண்டு. அத்துடன் பேருந்தை செலுத்தும் போதான ஓட்டுனரின் தொலைபேசி பாவனையை எதிர்க்க உமக்கு உரிமை உண்டு.
 • ஒலி / ஒளி கருவிகளின் நிபந்தனைகளுக்கமைய வானொலியொன்றை மட்டும் பயன்படுத்தும் பேருந்தில் பயணிக்க உமக்கு உரிமை உண்டு. வானொலியொன்றைப் பயன்படுத்துமானால், அதிகபட்சமாக 80 டெசிமல் அளவில் மட்டும் பயன்படுத்தக்கூடிய பேருந்து ஒன்றில் பயணிப்பதற்கு உமக்கு உரிமை உண்டு.
 • அனுமதிப் பத்திரப் பிரிவின் அதிகாரத்தின் கீழுள்ள பேருந்தில் பயணிக்கும் போது, வாகனத்தை நகர்த்தும்போது கதவுகள் மூடப்பட்டிருப்பதை நீங்கள் உணர முடியும்.
 • பணம் செலுத்தும் பயணி பேருந்தில் மிக மதிப்புமிக்க நபர் என்பதினால், அவர் தகுதியான கண்ணியமான மற்றும் நட்பு சேவையைப் பெற வேண்டும்.
 • போதையற்ற சேவை ஊழியர்களால் நீங்கள் சேவை செய்யப்படல் வேண்டும்.
 • அரை சொகுசு பேருந்தொன்றெனில், ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
 • நேர அட்டவணையின் படி, பேருந்து தொடங்கி முடிவடைகின்றது என்பது வெளிப்படையாக இருத்தல் வேண்டும். தொடக்க நேரம் மற்றும் முடிவடையும் நேரம் பேருந்தினுள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.