கெமி செரிய
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களின் அணுகலை விருத்தி செய்யும் நோக்குடன் 2005ஆம் .
இக் கருத்திட்டமானது முறையான நடைமுறை ஒன்றினூடாக உண்மையான சிக்கனமற்ற வீதிகளை அடையாளங் காண்கின்றது. மற்றும் சிக்கனமற்ற வீதிகளின் மீதான உண்மையான இயங்கும் இழப்புக்களை கவனத்திற்கொள்வதன் மூலம் சமூக ரீதியில் அத்தியாவசியமான சேவையினை மேற்கொள்ளும் சேவை வழங்குநர்களுக்கிடையில் நிதியைப் பகிர்ந்தளிக்கின்றது.
80 % இலங்கையர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? மற்றும் இவர்களுக்கு நகர்ப்புறங்களுக்கு இலகுவாகப் பயணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தேசிய கடமையாகும். அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்க முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களை வழங்குவதில் தேசிய போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டும் அது அத்தகைய சமூகங்களின் கடமை எனக் கருதிக் கொண்டு 2008 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து சபையின் சேவையுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தனது "கெமி சரிய" முயற்சியைத் துவங்கியது. கெமி சரிய கருத்திட்டமானது பொருளாதார ரீதியாக சிக்கனமற்றது எனக் கருதும் வீதிகளின் ஊடாக சலுகை விலையிலான சொகுசான மற்றும் வினைத்திறனான போக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் இவை அனைத்தையும் இணைக்க எதிர்பார்க்கின்றது.
இத் திட்டத்தின் நன்மைகள்
- பிரயாண நேரம் மற்றும் செலவைக் குறைத்தல்
- உற்பத்தி மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லும் திறன் ;
- கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக தேவைகளுக்கான வசதியான பயணம் ;
- வீதி அபிவிருத்தி .
சேவை கண்காணிப்பு
சேவை தரத்தினைக் கண்காணிப்பதற்காக பின்வருவன மேற்கொள்ளப்படுகின்றன.
- இ. போ.ச. டிப்போக்களின் பயண பதிவுகள் மற்றும் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் சரியான நேரத்தில் சேகரித்தல்
- சேவைப் பயணிகளைக் கொண்ட குழுக்களுடனான ஒத்துழைப்பு
- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊழியர்களினால் சேவைகளை பரிசோதித்தல்
கிராமப் போக்குவரத்துக் குழு 5-7 உறுப்பினர்களையும் பின்வருபவர்களையும் கொண்டிருக்கும்.
- ஒரு மதத் தலைவரால் ஒரு மத இடத்தின் பிரதிநிதித்துவம்
- குடும்ப சுகாதார சேவை பணியாளர்கள் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்/ கிராம சேவகர்
- Village கிராமத் தலைவர் (உதா: ஓய்வுப்பெற்ற அரசாங்க பணியாளர் ஒருவர்)
- கிராம இளைஞர் சங்கம்/ விளையாட்டு சங்கம்/ நலன்புரி சங்கம் போன்ற சமூக அமைப்பொன்றின் பிரதிநிதி
- தொடர்ச்சியான அடிப்படையில் பேருந்து சேவையைப் பயன்படுத்தும் முதியவர் ஒருவர்