நிசி செரிய பற்றி

பின்னிரவு நேரங்களில் போதான நம்பகமான மற்றும் அன்றாட பஸ் சேவைகள் வழங்கலை  "நிசி சரியவின்" கீழ் ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவானது அடையாளம் காணப்பட்ட 56 இரவு நேர சேவைகளுக்கு 50 % எரிபொருள் மீள்நிதியிடல் மூலம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் உரிமத்தை அடைய குறைந்தது 90% பயணத்தை சேவை வழங்குநர்கள் மேற்கொண்டிருத்தல் வேண்டும். கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 16 சேவைகள் அடையாளம் காணப்பட்டு இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 இ.போ.சபை சேவைகள் உள்ளன. (மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில்)

இலக்கு

கொழும்பு மற்றும் அதன் புற நகர்ப்பகுதிகளிலுள்ள இ.போ.ச. மற்றும் தனியார் இயக்குனர்களுடன் இணைந்து 100 'நிசி செரிய' இரவு சேவைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

சேவை கண்காணிப்பு

எமது பெறுமதிமிக்க பயணிகளுக்கு விஷேடமாக இரவு நேரங்களில் உயர் தரமான சேவை வழங்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பரிசோதகர்கள் பேருந்து வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பார்கள்.