சிசு செரிய

பாடசாலை பிள்ளைகளுக்கு பேருந்து சேவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "சிசு சரிய" சேவையானது இலங்கை போக்குவரத்து சபையின் நிலையங்களையும் பதிவு செய்யப்பட்ட தனியார் பஸ் சேவை உரிமையாளர்களையும் இணைக்கின்ற மக்கள் மயப்படுத்தப்பட்ட நம்பகமான மற்றும் சலுகையுடன் கூடிய பேருந்து சேவை ஆகும். தற்பொழுது 778 பஸ்கள் சேவையில் உள்ளன.

கல்வி அமைச்சு,  இலங்கை  பொலிஸ், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம் பிரத்தியேகமாக சீருடையில் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் பிரயாணத்தின் போது எந்த விதமான உடல் ரீதியான அல்லது உள ரீதியான துன்புறுத்தல்களின்றி பாதுகாப்பாக பாடசாலைக்குச் சென்று வரவேண்டும் என்பதாகும். 

சேவை

பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் செயற்பாடுகளின் போது இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. நேரந்தவறாமை என்ற மனநிலை காரணமாக இச் சேவையானது உரிய நேரத்தில் பாடசாலையை வந்தடைவதோடு புறப்பட்டும் செல்லும். பேருந்துகள் பாடசாலை தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் வருவதோடு பாடசாலை முடிவடைவதற்கு முன்னரே மாணவர்களை ஏற்றிச் செல்ல வரும். கல்வி சிறுவர்களின் உரிமை ஆகும். குறைந்த விலையிலான போக்குவரத்தினை வழங்குவதன் மூலம் சிசு சரிய பேருந்து சேவையானது சலுகை ரீதியான கட்டணங்களை வழங்கி பெற்றோர் தமது பிள்ளைகளை பொருளாதார சுமை இன்று பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர்.

சேவைக்கான அறவீடுகள் பின்வருமாறு

வயது வீதம்
12 வயதிற்கு மேல் வயது வந்தோர் பேருந்து கட்டணத்தில் 50%
12 வயதிற்கு கீழ் வயது வந்தோர் பேருந்து கட்டணத்தில் 25%

சேவை கண்காணிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தனது பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையை முக்கியமாக கருதுகின்றது. ஆகையால், சேவையில் உயர்தர நியமங்கள் காணப்படுகின்றனவா என்பதை பரிசீலிக்க தொடர்ச்சியான அடிப்படையில் இறுக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இந் நோக்கத்திற்காக ஒவ்வொரு பஸ்ஸிலும் ஆசிரியர் அல்லது சிரேஷ்ட மாணவர் ஒருவருக்கு இலவச பயண சீட்டு ஒன்று வழங்கப்படும்.  ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்து அதிபர் அல்லது பிரதி அதிபர், ஆசிரியர் கண்காணிப்பு ஆசிரியர் , இரண்டு சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்திலிருந்து  இரு பெற்றோர்கள் ஆகிய ஏழு அங்கத்தவர்களக் கொண்ட ஒரு குழு பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறித்த பேருந்தினைக் கண்காணிப்பதோடு அவற்றின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது.90 %  நம்பகத்தன்மையை பேருந்துகள் கொண்டிருந்தால் மாத்திரமே கட்டணங்கள் மேற்கொள்ளப்படும். 2011 ஜனவரியில் போது அரசாங்கமானது இதற்காக 240 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது. 

 

Press Releases