கௌரவ அமைச்சரின் செய்தி

Minister

உலகளாவிய ரீதியிலும், தேசிய ரீதியிலும் வினைத்திறனான போக்குவரத்து பொருளாதார அபிவிருத்தியின் முக்கியமான கூறொன்றாகும். போக்குவரத்து மனித நாகரிகத்தின் ஆரம்பத்திலிருந்து பொருளாதார அபிவிருத்தியில் பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி போக்குவரத்து முறைமைகளின் சங்கமத்தின் மீது கவனஞ்செலுத்துகின்றது. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கிடையிலான உறவுகளின் வலையில் உற்பத்திக் காரணிகளை போக்குவரத்து முதலீடுகள் ஒன்றாக இணைக்கின்றன. போக்குவரத்து முறைமைகள் வினைத்திறனாகவிருக்கின்ற போது பொருளாதார, சமூக வாய்ப்புகளும், சந்தைக்கான நகர்வு மற்றும் சிறந்த அணுகுமுறை, வேலைவாய்ப்பு அத்துடன் மேலதிக முதலீடுகள் போன்ற நேர்மறைப் பெருக்க விளைவுகளைத் தருகின்ற நன்மைகளும் வழங்கப்படுகின்றன. போக்குவரத்து முறைமைகள் திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய நியதிகளின் படி குறைபாட்டைக் கொண்டிருக்கும் போது, குறைந்தளவிலான அல்லது தவறவிடப்பட்ட வாய்ப்புக்கள், குறைந்த வாழ்க்கைத் தரம் போன்ற பொருளாதார செலவினைக் கொண்டிருக்க முடியும்.

எனவே, நிலைபேண் அபிவிருத்தியின் ஒத்துழைப்பிற்குத் தேவைப்படுத்தப்படும் சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்கு போக்குவரத்து முறைமைகள் வினைத்திறனான வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டும், பராமரிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் அத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டும் காணப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான இலங்கை மக்களை நோக்கிய கடப்பாடொன்றைத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கொண்டுள்ளது. உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் இணைக்கப்பட்டிருத்தல் எனும் நியதிகளின் படி, எமது போக்குவரத்து முறைமைகளின் தரநிலைகளை மேம்படுத்தத் தேவைப்படுத்தப்படும் தகவலையும் வழிகாட்டுதலையும் அணுகுதல் தொடர்பகத் தேவையான ஒத்துழைப்பை இந்த இணையத்தளம் வழங்கும் என்று நான் நம்புகிறேன். இவ் இணையதளத்தினூடாக ஆரம்பிக்கப்பட்ட எமது எதிர்கால முயற்சிகளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

 

Hon. (Dr.) Bandula Gunawardana

Minister of Transport and Highways and Minister of Massmedia