ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள்

பயணிகள் சேவை அனுமதிக்காகப் பதியப்பட்ட அத்துடன் பயணிகள் மற்றும் 3 ஆம் தரப்பினருக்கான (பாதசாரிகள், ஏனைய வாகனங்கள் மற்றும் சொத்து) வரையறையற்ற காப்பீட்டினை கொண்ட பேருந்துகளுக்கு மட்டும் பயணிகள் சேவை அனுமதி வழங்கப்பட்டது.
புதிய ஒழுங்குவிதிகளுக்கு அமைய, ஒவ்வொரு பேருந்தும் தீயணைப்புக் கருவியைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் சேவையில் ஈடுபட்டுள்ள போது மற்றும் பயணிகள் போக்குவரத்தின் போது எரிபொருள் நிலையங்களில் (பெற்றோல் / டீசல்) எரிபொருள் நிரப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
பணியிலுள்ள பேருந்து சேவை பணியாளர்கள் முறையான கண்ணியமான ஆடைகளை அணிந்திருத்தல் வேண்டும் மற்றும் அவரின் நடத்தை மரியாதையான முறையில் இருத்தல் வேண்டும். பணி உறுப்பினர் அவரின் கடமைகளை மேற்கொள்வதற்கு தகுதியானவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் அவரின் தே. போ.ச பதிவு அடையாளத்தை அவரிடம் வைத்திருத்தல் வேண்டும். .
பயணத்தின் ஆரம்பத்திலும் பயணத்தின் இறுதியிலும் பஸ் நிலையத்தில் ஒவ்வொரு பயணிக்கும் பயணச்சீட்டு ஒன்று கட்டாயம் வழங்கப்பட வேண்டும் மற்றும் பேருந்து பாதையில் பிரவேசிக்கும் பயணிகளிடமும் பயணச்சீட்டு ஒன்று வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும் பயணச்சீட்டு அங்கீகரிக்கப்பட்ட நியமங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதோடு ஒரு மின் உபகரணம் ஒன்றின் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.  .
சொகுசு மற்றும் அரைச் சொகுசு பேருந்துகளில் இருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் பயணிக்கக் கூடாது. நின்ற நிலையில் பயணிகள் பயணிக்க கூடாது. கொள்கையுடன் தொடர்புடையவர்களுக்கும் சேவையின் உயர் தரத்தை பெறுவோருக்கும் மாத்திரம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும். .
பின்வரும் பயணிகள் தகவல்கள் பேருந்தினுள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
 
  • பேருந்துக் கட்டணம்
  • பிரயாண ஆரம்ப நேரம்
  • பிரயாண முடிவிடத்தை அண்மிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட நேரம்
  • பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் தே. ​போ. ச பதிவிலக்கங்கள்
  • பேருந்து இலக்கம்
  • முறையாக செயல்படும் கடிகாரம்
பேருந்தின் முன், பின் பக்கங்களில் அங்கீகரிக்கப்பட்ட பெயர்ப்பலகை மாத்திரம் காட்சிப் படுத்தப் படவேண்டும் பயணிகளுக்கும் பாதசாரிகளும் தடைகள், ஆபத்துகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய பெயர்ப் பலகைகள் பேருந்தில் காட்சிப்படுத்தப்படக் கூடாது. எனவே, இலத்திரனியல் மின்சுற்றுக்களினூடாக அலங்கரிக்கப்பட்ட பொருள் அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்கள் பேருந்தினுள் இருக்கக்கூடாது .
பேருந்தினுள் ஒலியெழுப்பும் கருவியாக வானொலியை மட்டும் பயன்படுத்த முடியும் அத்துடன் இது பயணிகளுக்கு தொந்தரவு அளிக்காத வகையிலும் அவர்களின் சொகுசு நிலையை குழப்பாத வகையிலும் இருத்தல் வேண்டும். புதிய ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கு தே. போ. ச பல்வேறு செயல்களை செயற்படுத்தியுள்ளது.